Breaking News

காஞ்சிபுரம் அரசு பெண்கள் காப்பகத்தில் இருந்து ஆறு பெண்கள் அதிகாலை தப்பி ஓட்டம்

காஞ்சிபுரம் அரசு பெண்கள் காப்பகத்தில் இருந்து ஆறு பெண்கள் அதிகாலை தப்பி ஓட்டம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது அன்னை சத்யா குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம். இங்கு ஆதரவற்ற பெண்கள் தங்கள் கல்வி நிலையை தொடர இங்கு தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை மீட்டு இந்த அரசு காப்பகத்தில் தங்கி  பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில் இங்கு  20 மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்த நிலையில் வழக்கம்போல் இரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்று விட்டனர்.

அதிகாலை வேளையில்  பாதுகாவலர் இரவு பணியில் இருந்த போது அங்கு தங்கியிருந்த ஆறு பெண்கள் பாதுகாவலரனின் அறையை தாழிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதுகுறித்து பாதுகாப்பு மையத்தில் இருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாகவே சிறார் காப்பகத்தில் இருந்து சிறுவர்கள் மட்டுமே அடிக்கடி தப்பி ஓடும் நிலையில் தற்போது பெண்கள் காப்பகத்திலும் இந்நிலை துவங்கி உள்ளது வருத்தமளிக்கிறது.

No comments

Thank you for your comments