சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் MAD 2023 கலை விழா
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் MAD 2023 கலை நிகழ்ச்சிகள் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் த.சரவணன்,டீன் கீதா, கல்லூரியின் கலை இலக்கிய குழவின் உ்றுப்பினர்கள் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் கல்லூரியின் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிபடுத்தினார்கள் தனி நடனம், குழு நடனம், பாடல், பலகுரல், பல இசைக்கருவிகள் போன்ற ஏராளமான கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இவ்விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை கல்லூரியின் கலை இலக்கிய குழவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சாந்தகுமாரி மற்றும் தலைமையிலான குழுவினர்கள் பேராசிரியைகள் நிவேதப்ரியா, செவ்வந்தி, நீரஜா, ஆர்யா ராஜன் மற்றும் பேராசிரியர்கள் பாஸ்கரன், அருண் ராம்நாத்,மருதுபாண்டி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments