Breaking News

புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க விண்ப்பிக்கலாம்...

ஈரோடு:

புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல் அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில் பிரிவுகள் / கூடுதல் அலகுகள் தொடங்குதல் மற்றும் இடமாற்றம் செய்வது ஆகியன கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 25/04/2023 வரை www.nimionlineadmission.in/iti என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.


நிபந்தனைகள்:

1) தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்தபட்சம் நான்கு தொழிற்பிரிவுகளுடன் புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

2) நான்கு தொழிற்பிரிவுகளுக்கும் குறைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் புதிய தொழிற்பிரிவுகள் துவங்கிடவும் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்கிடவும்  விண்ணப்பிக்கலாம்.

3) தொழிற்பயிற்சி நிலையங்கள் இடமாற்றம் செய்தல்.

வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், ஈரோடு மாவட்டம்.


No comments

Thank you for your comments