Breaking News

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் உடன்பிறப்புகளாய் இணைவோம் உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.


சமீபத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரும்மான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜூன்-3 நூற்றாண்டு விழா காணும் முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவரும்மான கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்-உத்திரமேருர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்கள் அறிவுருத்தலின்படி  காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 2 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மாவட்டத்தில் ஆங்காங்கே உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

அவ்வகையில் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பி.எம் பாபு தலைமையில் ஈஞ்சம்பாக்கம், கொட்டவாக்கம், தண்டலம், புரசை, பரந்தூர் ஆகிய ஊராட்சிகளில் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற நிகழ்ச்சியை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.


ஐந்து ஊராட்சிகளில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஏராளமான இளைஞர்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் ஆர்வத்துடன் வந்து தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழுதலைவர் ஆர்.கே.தேவேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் வெங்கட்ராமன், திருஞானசம்பந்தம், ஆறுமுகம், பார்த்திபன், சங்கர், ஆனந்தன், அருள்முருகன், புரசை ஞானபிரகாசம், பரந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பலராமன்,  ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சூர்யா, வர்த்தக அணி  துணை அமைப்பாளர் காமாட்சி கருனாநிதி,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயபால், கெட்டவாக்கம் கிளை செயலாளர் ரங்கன், குப்பன், ஜெகதிஷ், முரளி.சரவனன். வேலவேந்தன், குலசேகரன், ஜோதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments