Breaking News

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

ஈரோடு : 

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் One Stop Centre) -ல் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட இணையதள முகவரி www.erode.nic.in -யில் உரிய படிவம் மற்றும் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காண் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் 28.04.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

1). முதுநிலை ஆலோசகர் - 1

கல்வி தகுதி :  சட்டம் / முதுநிலை சமூக பணியியல் துறை (ஆளுறு) 

அனுபவம் : அரசு மற்றும் அரசுசாராத நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக 3 வருட அனுபவம் மிக்க பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

சம்பளம் :  ரூ.20,000/-

2). வழக்கு பணியாளர் - 2

கல்வி தகுதி : சமூக பட்டப்படிப்பு / முதுகலை பட்டம் 

அனுபவம் : குறைந்தபட்சம்  1 ஆண்டுகள் அனுபவம் பெண்களுக்கு எதிராக வன்முறை  (அரசு மற்றும் அரசுசார்பற்ற நிறுவனம்) (பெண்கள் மட்டும்)

சம்பளம் : ரூ. 15,000/-

3). பாதுகாவலர் - 1

கல்வி தகுதி : கல்வித் தகுதி தேவை இல்லை பெருந்துறை (ம) ஈரோடு பகுதியை சார்ந்தவராக இருத்தல் அவசியம்.

அனுபவம் : பாதுகாவலர் பணிக்கு உள்ளுரில் வசிப்பவராகவும், அரசாங்கத்தில்  அல்லது பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். 

சம்பளம் : ரூ. 10,000/-

4). பல்நோக்கு உதவியாளர் - 2

கல்வி தகுதி :  கல்வித் தகுதி தேவை இல்லை. பெருந்துறை (ம) ஈரோடு பகுதியை சார்ந்தவராக இருத்தல் அவசியம்.

அனுபவம் : உதவியாளர் பணியில் குறைந்தது 3  ஆண்டுகள் (பெண்கள் மட்டும்) மற்றும் சமையல் தெரிந்தவராகவும், உள்ளுரில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

சம்பளம் :  ரூ.6,400/-







No comments

Thank you for your comments