Breaking News

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோவிலில் தேரோட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக இருந்து வரும் பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில். இக்கோவிலின் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலவார் குழலியும் ஏகாம்பரநாதர் சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் அமர்ந்து காஞ்சிபுரம் நகரில் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

தேரோட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தின் பணி ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம். வி. எம் வேல்முருகன் ஆகியோர் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். 

இந் நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வரதன், ஜெகநாதன் ,விஜயகுமார், வசந்தி சுகுமாரன் ,எம் எல் ஏக்கள் சுந்தர், சி .வி. எம். பி எழிலரசன், அறநிலை துறை இணை ஆணையர் வான்மதி, கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, அறநிலை துறை செயல் அலுவலர்கள் ந. தியாகராஜன், பெரியசாமி, சென்னை அமலாக்க பிரிவு எஸ்பி செந்தில்குமார், ஆகியோர் உட்பட பலரும்  கலந்து கொண்டனர். 

தேரோட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையின் தலைவர் பா. பன்னீர்செல்வம் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். 

தேரோட்டத்திற்கு முன்பாக பெண்கள் கோலாட்டம் கும்மியாட்டம் ஒயிலாட்டம் மற்றும் ஏராளமான சிவனடியார்கள் சிவ வாத்தியங்களை இசைக்க தேர் ராஜ வீதிகளில் பவனி வந்தது. 

இதனை தொடர்ந்து திருக்கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற்ற அன்னதானத்தை அறங்காவலர் குழு தலைவர் எம் வி எம் வேல்மோகன் தொடங்கி வைத்தார். தேரோட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

No comments

Thank you for your comments