ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்ச்சவத்தின் 8-ஆம் நாள் இரவு குதிரை வாகனத்தில் காட்சி

பஞ்ச பூத ஸ்த்தலங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்ச்சவத்தின் 8-ஆம் நாள் இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்த ஏகாம்பரநாதர்

குதிரை வாகனத்தின் மீது அமர்ந்தபடி நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஏகாம்பரநாதரையும்,ஏலவார்குழலி அம்மையாரையும் வழிநெடுகிலும் பக்தி பரசவத்துடன் வணங்கி வழிபட்ட பக்தர்கள்


பஞ்சபூத ஸ்தலங்களில் மர் விளங்கக்கூடிய புகழ் பெற்ற சிவஸ்தானங்கள் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றமானது வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது.


இவ்விழாவின் எட்டாம் நாள் விழாவையொட்டி மாலை ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலிக்கும் சிறப்பு அபிஷேகமானது நடைபெற்று அதனை தொடர்ந்து இரவு ஏகாம்பரநாதரும்,ஏலவார்குழியும் குதிரை வாகனத்தின் மீது எழுந்தருளி நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இவ்விழாவையொட்டி வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தியோடு ஓம் நமச்சிவாய முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

No comments

Thank you for your comments