மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு இன்று மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபானம் விற்க தடை... - Dry Day அறிவிப்பு
தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின் படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் கீழ்கண்ட நாட்களில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பினை தொடர்ந்து.
1. 04.04.2023 (செவ்வாய் கிழமை) மகாவீர் ஜெயந்தி
எனவே, மேற்படி நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) FL1 , FL2, FL3, FL3A FL3AA மற்றும் FL11 ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments