ஒரு அதிகாரியின் குமுறல் தமிழக அரசு செவி சாய்குமா?
திருவள்ளூர் :
திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியராக பணி செய்து அங்கிருந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்து திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியராக பணி செய்த பொன்னையா தற்போது நகராட்சி இயக்குனராக பணி செய்து வருகிறார்
இவர் இந்த பதவியேற்றிலிருந்து சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் சில மாவட்டங்களில் பணிபுரிந்த நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரிந்த அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து சிலரை தற்காலிக பணி நீக்குமம் செய்தார்
இதை தொடர்ந்து இவர் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஊராட்சிகள் இருந்த நிலையில் இவைகளை தரம் உயர்த்தி இவைகளுக்கு தேவையான பதவிகளையும் புதியதாக அறிவித்து இவர் அதிகாரிகள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தினார் இதை தொடர்ந்து தற்பொழுது நகரமைப்பு பிரிவில் நகர அமைப்பு ஆய்வாளர்கள் பதவி உயர் கொடுத்து நகராட்சி அலுவலராக சிலர் பதவி உயர்வு பெற்றனர்
இதில் முறையானவர்களுக்கு 50 சதவீதம் என்றும் தகுதி இல்லாதபதவி உயர்வு கிடைத்ததை என்னி சில அதிகாரிகள் புலம்பி வருகின்றனர் சிலருக்கு பணம் பெற்றுக் கொண்டு பதவி உயர்வு பெற்றதாகவும் தெரிவித்தனர் அது மட்டும் இல்லாத சிலர்கள் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையிலும் சிலருக்கு சார்ஜஸ் உள்ள நிலையிலும் பதவி உயர்வு வழங்கியதாக புகார் இருந்துள்ளது
இதைத் தொடர்ந்து ஒரு அதிகாரி அவர்கள் வாஸ் அப் குரூப்புகளில் அருமையான பாடலை மனம் நொந்து வெளியிட்டு இருந்தார் அந்தப் பாடல் என்னவென்றால் ஒண்ணுமே புரியல உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்கிறது என்ற பாடலை வெளியிட்டு அவருடைய வேதனைகளை தெரிவித்தார்.
இவருக்கு சில அதிகாரிகளும் உண்மைதான் என்று இவருக்கு ஆறுதலும் வழங்கினார் இது போல் அதிகாரிகளை கண்டறிந்து இவர்களுக்கு முறையாக பதவி உயர் கிடைக்க வேண்டும் என்பது சில அரசு அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது நகராட்சிகளின் இயக்குனர் பொன்னயைா நடவடிக்கை எடுப்பாரா பார்போம்
No comments
Thank you for your comments