Breaking News

28-04-2023ம் தேதி ராசி பலன்கள்


தமிழ் ஆண்டு, தேதி - சோபகிருது, சித்திரை 15, 
வெள்ளிக்கிழமை, April 28, 2023  ↑
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை

திதி
சுக்ல பக்ஷ அஷ்டமி   - Apr 27 01:39 PM – Apr 28 04:01 PM
சுக்ல பக்ஷ நவமி   - Apr 28 04:01 PM – Apr 29 06:22 PM

நட்சத்திரம்
பூசம் - Apr 27 06:59 AM – Apr 28 09:53 AM
ஆயில்யம் - Apr 28 09:53 AM – Apr 29 12:47 PM

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 5:58 AM
சூரியஸ்தமம் - 6:24 PM
சந்திரௌதயம் - Apr 28 12:33 PM
சந்திராஸ்தமனம் - Apr 29 1:37 AM



இன்றைய ராசி பலன்கள்  :

மேஷம்    :   மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் வேலை மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வீடு மற்றும் வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் அதிரடியான சில செயல்களின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : எண்ணங்கள் ஈடேறும்.

பரணி : சிந்தனைகள் மேம்படும். 

கிருத்திகை : ஆதரவான நாள்.


ரிஷபம் :  மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். முயற்சிகளில் இருந்த மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : நம்பிக்கை பிறக்கும். 

ரோகிணி : நெருக்கம் அதிகரிக்கும். 

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


மிதுனம் :  அடிப்படை கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். பேச்சுக்களுக்கு உண்டான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். விருப்பமான உணவினை உண்டு மகிழ்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

திருவாதிரை : மாற்றம் பிறக்கும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.


கடகம் :  முயற்சிகளில் இருந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் தனித்து செயல்படுவீர்கள். மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அவ்வப்போது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். கற்பித்தல் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உதவிகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : தடைகளை அறிவீர்கள்.

பூசம் : வதந்திகள் நீங்கும்.

ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.


சிம்மம்  :  குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். வரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : அனுசரித்து செல்லவும்.

பூரம் : அறிமுகம் கிடைக்கும். 

உத்திரம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.


கன்னி  :  மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்காலம் நிமிர்த்தமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளுக்கு சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். இழுபறியான வழக்கு சார்ந்த விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திரம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

அஸ்தம் : முயற்சிகள் கைகூடும். 

சித்திரை : முடிவு கிடைக்கும்.


துலாம் :  உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். நவீன தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எதிராக இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். பழைய சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சித்திரை : ஆதாயம் உண்டாகும். 

சுவாதி : ஒத்துழைப்பு மேம்படும். 

விசாகம் : சிந்தனைகளை தவிர்க்கவும்.


விருச்சிகம் : உடனிருப்பவர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சுயதொழில் புரிபவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 

விசாகம் : மாற்றமான நாள்.

அனுஷம் : தெளிவு பிறக்கும். 

கேட்டை : ஒற்றுமை அதிகரிக்கும்.


தனுசு :  கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு சிறு சிறு குழப்பம் ஏற்படும். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மூலம் : சிந்தித்து செயல்படவும். 

பூராடம் : குழப்பமான நாள்.

உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


மகரம்  :   தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். நிறைவான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவோணம் : அனுகூலம் உண்டாகும். 

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும். 


கும்பம் :  உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் இழுபறியான சரக்குகளை விற்பீர்கள். உத்தியோகத்தில் உள்ள சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 

சதயம் : ஆர்வம் ஏற்படும். 

பூரட்டாதி : மதிப்பு அதிகரிக்கும்.


மீனம்  :  உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பயனற்ற செலவுகளை குறைத்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.

உத்திரட்டாதி : எண்ணங்கள் கைகூடும். 

ரேவதி : மாற்றமான நாள்.


No comments

Thank you for your comments