அரசு கொடுத்த இலவச நிலத்திற்கு மின் இணைப்பு வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் நகரப் பகுதிகளில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பின்புறம் வடக்கு மாடவீதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகள் காலி செய்யப்பட்டு இடிக்கப்பட்டன பொன்னேரி கரை பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன
இவர்களுக்கு மாற்று இடம் மாவட்ட நிர்வாகத்தால் ஏனாத்தூர் ஊராட்சியில் வாரி நகர் என ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது
காலி இடத்தில் உடனடியாக கொட்டாய் வீடு அமைத்திட வேண்டும் என அதிகாரிகள் கூறியதால் அங்கு இருந்த மக்கள் 70-க்கும் மேற்பட்டவர்கள் குடிசை வீடு அமைத்தனர்
குடிசை வீடுகள் அமைத்து சுமார் எட்டு மாதங்கள் ஆகியும் குடிநீர் மின் இணைப்பு சாலை வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தர ஊராட்சி நிர்வாகம் முன் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்
அவசர அவசரமாக அமைக்கப்பட்ட கூரை வீட்டுக்கு வரி செலுத்த வேண்டும் என ஊராட்சி மன்ற நிர்வாகம் கூறியதால் அங்குள்ள மக்கள் வரியும் செலுத்தியுள்ளனர்
ஆதார் அட்டை ரேஷன் அட்டைகளில் இருந்து பழைய முகவரியை நீக்கிவிட்டு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இடத்தின் முகவரியை அளித்துள்ளனர் இந்த ஆண்டு பிள்ளைகளை எந்த முகவரிலுள்ள பள்ளிகளில் சேர்ப்பது தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாரேந்திரன் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட முறை மனு அளித்தோம் எந்த ஒரு பயனும் இல்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்
No comments
Thank you for your comments