சேலம் பாமக அலுவலகத்தில் வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாவட்ட செயற்குழு கூட்டம்
சேலம் வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாவட்ட செயற்குழு கூட்டம், சேலம் ஐந்து ரோட் அருகில் உள்ள பாமக அலுவலகத்தில் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.விஜயாராசா தலைமை தாங்கினா். பேரவையின் மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு, மாநில வன்னியர் சங்க செயலாளர் மு.கார்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
பேரவையின் மாநில செயலாளர் வழக்கறிஞர் மகாலிங்கம், முன்னாள் மாநில சட்டபாதுகாப்பு குழு செயலாளர் வழக்கறிஞர் குமார், பேரவையின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பகத்சிங், சட்டகல்லூரி அமைப்பாளர்கள் வாழப்பாடி மகேஸ்வரன், பென்னாகரம் அன்புமணி, வீமனூர் தர்மராஜ், முத்துநாயக்கன்பட்டி மோகன்ராஜ், பாமக மாவட்ட துணை செயலாளர்கள் பனமரத்துப்பட்டி நரசிம்மன், வீரபாண்டி லட்சுமணன், ரத்தினவேல் பைரோஜி ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் வன்னியர் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு, வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம், பேரவையின் 20-ஆம் ஆண்டு விழா உள்ளிட்டவை குறித்து விவாதிக்கபட்டது. புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரவிக்கப்பட்டது.

No comments
Thank you for your comments