சேலம் சட்டக்கல்லூரியில் உள்விளையாட்டு போட்டி-2023 க்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி
சேலம்
சேலம் சட்டக்கல்லூரியில் உள்விளையாட்டு போட்டி-2023 பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
இதில் மாணவ மாணவிகள் பல்வேறு விளையாட்டுபோட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி கல்லூரியின் விழா அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் பேகம் பாத்திமா அவர்கள். வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் தலைவர் த.சரவணன் அவர்கள். தனது தலைமை உரையில் மாணவர்கள் வாழ்க்கையில் இலக்கை அடைவதற்கு தொடர்பயிற்ச்சி, விடாமுயற்சி, ஒழுக்கம், கடின உழைப்பு போன்றவைகளை பின்பற்றி வந்தால் வாழ்க்கையின் அடுத்தநிலைக்கு செல்லலாம்.
மேலும் மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் நேரத்தை வீணடிக்காமல் நல்ல வழிகளில் செலவழித்து வாழ்வில் முன்னேறவேண்டும் என்று கூறினார். 2023க்கான விளையாட்டு ஆண்டு அறிக்கையை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ம.வெங்கடேஷ் வாசித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர்.சிவக்குமார் கலந்து கொண்டு தனது சிறப்புரையில் சட்ட மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெறுவதும் மிக முக்கியமானது, அதுபோல சட்டப்படிப்பில் தினமும் வரும் வழக்குகள் பற்றிய புதிப்பித்துகொள்ளும் திறமையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வழக்கறிஞர்கள் அவர்களது கம்பீரமான உடையாலும் நேர்மையான பேச்சு திறமையால் மட்டுமே அவர்களால் வழக்குகளில் வெற்றிபெறமுடியும், வழக்கறிஞர்கள் மாதம் ஒரு வழக்கை ஒரு ஏழைக்காவது இலவசமாக நடத்தி நீதி கிடைக்க உறுதிமொழி எடுத்துகொள்ளுங்கள் என்று கூறி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வின் முடிவில் உடற்கல்வி இயக்குநர் ம.சங்கர் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதற்கான விரிவான ஏற்பாடுகளை கல்லூரியின் விளையாட்டு குழுவின் உறுப்பினர்கள் மற்றும் கல்லூரியின் டீன் டாக்டர்.டி.என்.கீதா அவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments