Breaking News

கல்லூரி மாணவர்களை போதை பொருள் பயன்பாட்டில் இருந்து மீட்க STUDENTS ANTI DRUG AWARENESS CLUB திட்டம்..

கோவை :

கோவை மாவட்டம் காவல் துறையுடன் கல்லூரி நிர்வாகம் இணைந்து மாணவர்களிடையே போதை புழக்கத்தை கட்டுபடுத்த  உறுதியேற்று, கோவை மாவட்ட காவல்துறையினர் முன்னெடுப்பு  நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கோவை மாவட்டத்தில்  கல்லூரி மாணவர்களை போதை பொருள் பயன்பாட்டில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டம் STUDENTS ANTI DRUG AWARENESS CLUB என்ற திட்டம். 

இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி  கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை சரக காவல் துணைத்தலைவர்  விஜயகுமார்,  மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

கோவை சரக காவல் துணைத்தலைவர் அவர்கள் கோவை மாவட்டத்தில் கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்பின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கிடையே புலங்கும் போதைப் பொருள்களையும், விற்பவர்களையும் கட்டுப்படுத்த வருங்காலங்களில் மிகவும் கடினமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை வைத்து Anti Drug Awareness  என்ற வாட்ஸ் அப் குரூப் தொடங்கவும் அறிவுறுத்தினார். 

மாதம் ஒருமுறை காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தி போதை பொருள் உபயோகத்தை முழுமையாக கட்டுப்படுத்தவும் அறிவுரைகள் வழங்கினார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கிடையே பெருமளவில் போதைப் பொருட்களுக்கு எதிராக  விழிப்புணர்வு ஏற்படுத்தி போதை பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். 

மேலும் கல்லூரிகளுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் என்றும் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம்  மாணவர்களின் போதைப்பொருள் உபயோகத்தை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் வருங்காலம் பாதிக்காமல் இருக்க எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும் கலந்தாலோசித்தார்கள்.

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவலர்களுக்கு போதை பொருள் தடுப்பு நடவடிக்கை பற்றி சிறப்பு பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம் சரியான முறையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் மறுவாழ்வு மையங்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். 

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் உள்ள 100- க்கும்  மேற்பட்ட  கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments