காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் திருஅவதார உற்சவம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் திருஅவதார உற்சவத்தையொட்டி உற்சவர் விளக்கொளிப்பெருமாள் கோயிலில் புதன்கிழமை திருவிளக்கு பூஜையும், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்ததையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி யருடன் உற்சவர் விளக்கொளிப் பெருமாள் காலையில் தங்கப்பல்லக்கில் சின்னக்காஞ்சிபுரம் மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில் மாட வீதிகளில் தேசிகன் சுவாமிகளுடன் பவனி வந்தார்.
ஆலயத்துக்கு வந்து சேர்ந்ததும் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது.மாலையில் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.இரவு பெருமாள் கேடயத்தில் ராஜ அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வீதிஉலா வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

No comments
Thank you for your comments