Breaking News

ஏனாத்தூரில் ஒரே பளிங்கு கல்லால் ஆன மகா பெரியவர் சிலை பிரதிஷ்டை

காஞ்சிபுரம், ஏப்.19 :

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் 1200டன் எடையுள்ள ஒரே பளிங்கு கல்லால் செய்யப்பட்ட மகா பெரியவர் உருவச் சிலை அண்மையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் ஆலங்குடி எஸ்விஆர் ஸ்ரீவாசன் ஐயர் புதன்கிழமை தெரிவித்தார்.

ஒரே பளிங்கு கல்லால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகா பெரியவர் உருவச்சிலை

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் காஞ்சி காமாட்சி அம்மன் நகர் விரிவாக்கம் ஸ்ரீமகா பெரியவா புது அக்ரஹாரம் பகுதியில் ஒரே பளிங்கு கல்லால் ஆன மகா பெரியவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இச்சிலை வைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் நிறுவனரான ஆலங்குடி எஸ்விஆர் ஸ்ரீவாசன் ஐயர் கூறுகையில் ஜெய்ப்பூரில் ஒரே பளிங்கு கல்லால் ஆன 1200 கிலோ எடையுள்ள மகா பெரியவர் சிலை வடிவமைக்கப்பட்டது.இச்சிலையை அண்மையில் ஏனாத்தூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இச்சிலைக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம், ஆராதனைகள் செய்யலாம்.

பக்தர்கள் தியானம் செய்யவும், மகா பெரியவரை சுற்றி வந்து தினசரி வழிபாடுகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக இதே இடத்தில் 50 அடி உயர மணி மண்டபம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.அம்மணி மண்டபத்தில் மகா பெரியவரை நின்ற கோலத்தில் விஸ்வரூப தரிசனக் காட்சியாகவும் காணும் வகையில் வடிவமைத்து வருவதாகவும் ஸ்ரீவாசன் ஐயர் தெரிவித்தார்.



No comments

Thank you for your comments