Breaking News

ஊதியம் வழங்காத அண்ணா பல்கலைக்கழகம்... போராட்டத்தில் குதித்த உதவி பேராசிரியர்கள்

காஞ்சிபுரம் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி கரை பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி காஞ்சிபுரம் செயல்பட்டு வருகிறது.


இது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்பட்டு வரும் உறுப்பு கல்லூரி எங்கு 70-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்

அதேபோல் அரசு கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

ஆட்கள் தேவை

தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணிக்கு தகுதியான ஆட்கள் தேவை. பெண்களுக்கு முன்னுரிமை உண்டு. 

தகுதி : Any Degree

சம்பளம்:ரூ.15,000+Incentive

தொ.எண் : 9360006677


இந்நிலையில் ஒரு வருட காலமாகவே இக்கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர்கள் அதேபோல் இதர பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது 

அதேபோல் கல்லூரியின் படிப்பை முடித்துவிட்டு வெளியே சென்ற மாணவர்களுக்கு திருப்பி செலுத்தக்கூடிய தொகையை கட்டுத்தொகை தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது இந்த விசாரணையில் கல்லூரியின் வங்கி கணக்கில் சுமார் மூன்று கோடி ரூபாய் பணம் இருந்து வந்த நிலையில் தற்பொழுது மாயமாகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த மாதமும் கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் மாதச் சம்பளம் வழங்கப்படவில்லை இதன் காரணமாக உதவி பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்திற்கு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இது குறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் சிலர் செய்த செய்திகளை சேகரிக்க சென்றபோது கல்லூரியின் முதல்வர் கவிதா செய்தியாளர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார் இதன் காரணமாக கல்லூரி பகுதியில் பெரும் பரபரப்பு சூழல் நிலவு வருகிறது

No comments

Thank you for your comments