ரோட்டரி ஆம்புலன்ஸ் சேவையினை தொடக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்
காஞ்சிபுரம் அடுத்துள்ள கீழம்பி ஊராட்சியில் ரோட்டரி காஞ்சிபுரம் ஆம்புலன்ஸ் சேவையினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பரணிதரன், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி, ஒன்றிய செயலாளர் பிஎம்.குமார், ஒன்றிய துணை செயலாளர்-ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர், இளஞ்செழியன், ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, டிக்கா மணி, சசிகுமார், ராஜசேகர், பிரகாஷ், ஹென்ரி, சுரேஷ்பாபு, குணபூஷணம், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட கழகத்தினர் உடனிருந்தனர்.


No comments
Thank you for your comments