Breaking News

விவசாயிகளின் விவர பதிவுகளுக்கு புதிய இணையதளம் அறிமுகம்

வேலூர் :

விவசாயிகளின் விவர பதிவுகளுக்கு புதிய இணையதளம்  அறிமுகம் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


வேலூர் மாவட்ட விவசாயிகள் வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண் அடுக்குத் திட்டம் / கிரைன்ஸ் இணையத்தில் ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர்  பெ.குமாரவேல் பாண்டியன்  தெரிவித்துள்ளார்.

வேளாண் அடுக்குத் திட்டம் என்பது தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைசார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகி விவசாயிகள் தங்கள் ஆதார் எண், விவசாயின் புகைப்படம், வங்கிக் கணக்கு எண் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.



பதிவேற்றம் செய்யும் போது நிலவிவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயியின் விவரங்களின் அடிப்படையில் கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு வேளாண்மை-உழவர் நலத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்துறை, கூட்டுறவுத்துறை, உணவுவழங்கல்துறை, வேளாண்பொறியியல்துறை, ஊரகவளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதைச் சான்றளிப்புத்துறை மற்றும் சர்க்கரைத்துறை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் பயனடைய ஏதுவாகிறது.

மேலும், நிதிதிட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பணபரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும். வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்ய வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், உதவி வேளாண்மைத்துறை, உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி கிரைன்ஸ் வலைதளத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,  கேட்டுக்கொண்டுள்ளார்.


No comments

Thank you for your comments