காஞ்சிபுரம் நகர்புற பகுதியில் போலி டாக்டர்கள் இருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகர்புற பகுதியில் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில், திரு.கோபிநாத், இயக்குநர், மருத்துவ நலப்பணிகள் தலைமையில், திரு.ஜீலியஸ் சீசர், காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் சிவகாஞ்சி காவல்நிலைய ஆய்வாளர் திரு.விநாயகம் ஆகியோருடன் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்டதில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னதி தெருவை சேர்ந்த சேஷாத்திரி ராஜீ மற்றும் காஞ்சிபுரம் நிமிந்தகரை தெருவைச் சேர்ந்த சுதர்சன்பாபு ஆகியோர் தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல் மருத்துவர்களாக மக்களை ஏமாற்றி போலியாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் மக்களை ஏமாற்றி போலி மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.



No comments
Thank you for your comments