தீத்தொண்டு வார விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரம் தீயணைப்பு அலுவலகம் சார்பில் தீத்தொண்டு வார விழிப்புணர்வு பேரணி மாவட்ட அலுவலர் ப.ஆர்னீசா பிரியதர்சனி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் மற்றும் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டது
இதில் தீயனைப்பு வீரர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பெரிய வாகனங்களில் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் காமராஜர் வீதி அன்னை இந்திரா காந்தி சாலை மற்றும் நான்கு ராஜ வீதிகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் நடைபெற்று வருகிறது இந்நிகழ்ச்சியினை காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி துவக்கி வைத்தார்
இதில் உதவி மாவட்ட அலுவலர் உள்ளிட்ட நிலைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments