Breaking News

அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தார். 


காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாதம் சோமவார முதல் பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது‌.

இதில் உற்சவர் முத்தீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்ற தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

இவ்விழா ஏற்பாட்டினை ஆலய அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. 

இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பேரருளை பெற்று சென்றனர் தமிழ் புத்தாண்டின்  முதல் பிரதோஷம் என்பதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது.

No comments

Thank you for your comments