Breaking News

சோபகிருது ஆண்டிண் முதல் நாள் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத் சங்கம் டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய பூஜை

சுபம் அளிக்கும் சோபகிருது ஆண்டிண் முதல் நாள் உலக மக்கள் நன்மை கருதி குரோம்பேட்டை சுந்தர விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பாராணத்துடன் விமர்சயாணபூஜை நடைபெறவுள்ளது.  



உலக நன்மை கருதி நமது ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத் சங்கம் டிரஸ்ட் சார்பில் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளை,  ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சோபகிருது தமிழ் புத்தாண்டில், குரோம்பேட்டை நியூ காலனி ஐந்தாவது மெயின் தெருவில் உள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில்  நடபெறவுள்ளது.  ஸ்ரீ காமாட்சி வேக ஆகம வித்யாலயா, கோசாலை ஆகிய மூன்றும் ஒரே  இடத்தில் அமைந்து இருப்பது சிறப்பு.

14ம் தேதி காலை ஆறு முப்பது மணி அளவில் கோபூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்க உள்ளது.  தொடர்ந்து ஸ்ரீ ருத்ர பாராயணமும்,  ஆயுஷ்ய  ஸூக்தம் உட்பட ஏழு ஸுக்த பாராயணங்களும்,  ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் உள்ள அனைத்து சன்னதிகளில் அபிஷேக,  அலங்காரமும், பாடசாலையில் ஸமாராதனையும், வித்யார்த்திகளை கௌரவித்தலும், அன்னம் பாலிப்பும் நடைபெறும்.

பாடசாலை பிரதம உபாத்யாயர் ஸ்ரீ பிரதாப் சிவாச்சார்யா அனைத்து நிகழ்வுகளிலும் நமக்கு உறுதுணையாக இருந்து நடத்திக் கொடுக்கிறார்.

புத்தாண்டு பிறந்தால் வாழ்வில் மகிழ்ச்சியும், புதுமைகளும் அதிகரிக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.  அவ்வகையில் வரும் சோபகிருது வருடம் முழுவதும் அனைத்து நலன்கள் பெற, அன்று நடக்கும் பூஜை,  ஹோமங்களில் உங்கள் சார்பாக பிரத்தியேக பிரார்த்தனையும், சங்கல்பமும் செய்யப்படும்.  வாய்ப்பு இருப்பின் நேரில் பங்கேற்க அழைக்கின்றோம். என் டிரஸ்டின் நிர்வாகி    ராமன் வெங்கடா அழைப்பு விடுத்தார்.

No comments

Thank you for your comments