போக்சோ வழக்கில் இரு இளைஞர்களுக்கு 10 வருட சிறை தண்டனை.. ரூ.40.000 அபராதம் விதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நெ.2, அண்ணா தெரு. பெரியார் நகர், ஆவடி, சென்னையைச் சேர்ந்த காஞ்சனா(44) க/பெ தயாளன், என்பவர் கடந்த 23.07.2015 அன்று அவரது மகளை எதிரிகள் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து அதேபோன்று பாலியல் வன்புணர்ச்சி செய்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து. எதிரிகள் கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு பின்னர் வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ராதேவி, நீதிமன்ற மு.நி.காவலர். 2051 மாலா, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.புவனேஷ்வரி, ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
இந்நிலையில் இன்று (12.04.2023) மேற்படி வழக்கின் எதிரிகள்
1)கணேசன்(25) த/பெ.கஜேந்திரன் நாயுடு, ஆவடி மற்றும்
2)ராஜா(25) சென்னை த/பெ.காளிமுத்து, பருத்திப்பட்டு, ஆவடி சென்னை
ஆகியோருக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி மேற்படி எதிரி குற்றவாளி என உறுதிசெய்து 10 வருடம் சிறை தண்டனை, ரூபாய் 40.000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், இவ்வழக்கில் எதிரிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர். நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் வெகுவாக பாராட்டினார்.

No comments
Thank you for your comments