Breaking News

ஐயங்கார் குளம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தியின் அனைத்து அதிகாரங்களும் பறிப்பு

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தியின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு தற்காலிகமாக துணை தலைவர் சோமசுந்தரம் கையாள உத்தரவு

கடந்த மாதம் வேண்டா சுந்தரமூர்த்தி 15,000 லஞ்சம் விவகாரத்தில் கையும் களவுமாக சிக்கி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கை


காஞ்சிபுரம் மாவட்டம் ஐய்யங்கார்குளம் ஊராட்சி மன்ற தலைவரான வேண்டா சுந்தரமூர்த்திடம் கடந்த மாதம் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் வீடு கட்டுவதற்கு வரைபடம் அனுமதி கோரியிருந்த நிலையில் இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் 15000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கிருஷ்ணமூர்த்தி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் அளித்தார். 

தகவலின் பெயரில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்திருந்து ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்த மூர்த்தி லஞ்ச பணம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


இந்த நிலையில்  ஐயங்கார்குளம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தியின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு தற்காலிகமாக துணை தலைவர் சோமசுந்தரம் கையாள உத்தரவிடப்பட்டுள்ளது.

லஞ்சம் விவகாரத்தில் கையும் களவுமாக சிக்கி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

No comments

Thank you for your comments