காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் 58வயது முதியவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துகொண்டு தற்கொலை
தன்னுடன் சண்டையிட்டு மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் முதியவர் விபரீத முடிவு
சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர்(58). இவர் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் ஹேமலதா என்பவருடன் வசித்து வந்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவருக்குமே திருமணமாகி சென்ற நிலையில் இவர்கள் இருவர் மட்டுமே இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்குமிடையே அவ்வப்போது சண்டை ஏற்படும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது மனைவிக்கும் ஞானசேகருக்கு சண்டை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் கோபமடைந்த ஞானசேகரின் மனைவி தனது மகளின் வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த இரண்டு மாதங்களாகவே தனியாக இருந்துவந்த ஞானசேகரன் விரக்தியில் இருந்ததாகவும் இதனால் அவ்வப்போது மது அருத்துவிட்டு இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இன்று உடலில் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி கொண்டு தனக்கு தானே நீ வைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
வீட்டின் உரிமையாளர் கீழே இறங்கி வெளியே செல்லும் போது ஞானசேகரனின் வீட்டில் புகை வந்துள்ளது.
இதனையெடுத்து சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக விஷ்ணு காஞ்சி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது ஞானசேகரன் எரிந்த நிலையில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனையெடுத்து ஞானசேகரனின் உடலை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments
Thank you for your comments