பொய்யாக்குளம் பகுதியில் சாலைகளில் ஆறு போல் வழிந்தோடும் கழிவு நீர்... பாதாளச் சாக்கடை அவலம்..
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட பொய்யாக்குளம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக பாதாளச் சாக்கடை மெனுவலிருந்து கொப்பளித்துக்கொண்டு வெளியேறும் கழிவு நீர்
சாலைகளில் ஆறு போல் வழிந்தோடி குளம் போல் சாலைகளில் தேங்கிநிற்கும் கழிவு நீரால் அப்பகுதியினர் கடும் அவதி
கழிவு நீரால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றமும் வீசுவதால் அப்பகுதியை கடந்துச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் மூக்கை மூடிக்கொண்டு கடந்துச்செல்லும் அவலம்
மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகவும்,அலட்சியமாக செயல்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட பொய்யாக்குளம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொய்யாக்குளம் பகுதியிலுள்ள லாலாகுட்டை தெரு மற்றும் மாகாளியம்மன் தெருக்களில் கடந்த நான்கு நாட்களாக அங்குள்ள பாதாள சாக்கடை மெனுவலில் இருந்து கழிவு நீரானது கொப்பளித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் ஆறு போல் வழிந்தோடி அங்காங்கே குளம் போல் தேங்கி நின்றும், அப்பகுதியினர் பாதிக்கப்பட்டு கடும் அவதியுற்று வருகின்றனர்.
குறிப்பாக காலை வேளையில் பள்ளிச்செல்லும் குழந்தைகள், மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள்,வேலைக்கு செல்வோர்,பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் சாலைகளில் தேங்கி நின்று, ஆறு போல் வழிந்தோடும் கழிவு நீரால் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.மேலும் இதனால் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசுவதாலும் அப்பகுதியை கடந்துச் செல்வோரும்,வாகன ஓட்டுகளும் மூக்கை மூடிக்கொண்டு கடந்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு உரிய புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாகவும்,அலட்சியமாகவும் செயல்பட்டு வருவதாக அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் தங்கள் பகுதியில் அவ்வப்போது இந்த கழிவு நீர் பிரச்சினை ஏற்படுவதால் இதற்கு நிரந்தர தீர்வை காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் எடுத்திட வேண்டும் என்பதே அப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.





No comments
Thank you for your comments