Breaking News

காஞ்சிபுரம் அருகே ஏரியில் மூழ்கி இரு சிறுமியர் சாவு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராம ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமியர் திங்கள் கிழமை உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வாய் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பாஸ்கரன். இவரது மகள்கள் விஜய்(9), பூமிகா(8) இவர்கள் இருவரும் நெல்வாய் ஊராட்சி ஒன்றிய அரசு நிடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.


ஆட்கள் தேவை

தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணிக்கு தகுதியான ஆட்கள் தேவை. பெண்களுக்கு முன்னுரிமை உண்டு. 

தகுதி : Any Degree

சம்பளம்:ரூ.15,000+Incentive

தொ.எண் : 9360006677


சம்பவ நாளன்று சகோதரிகளான இருவரும் பள்ளி முடித்து விட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோர்களை பார்க்க சென்ற போது இயற்கை உபாதைகளை கழித்து விட்டு அருகில் நெல்வாய் கிராம ஏரியில் கை,கால்களை சுத்தம் செய்ய சென்று ஏரியில் மூழ்கியிருக்கின்றனர்.

குழந்தைகள் நீண்ட நேரம் ஆகியும் வராமலிருந்ததால் பெற்றோருக்கு சந்தேகம் வந்து தேடிய போது இரு குழந்தைகளும் ஏரியில் மூழ்கிக் கிடந்தது தெரிய வந்தது.

உடனடியாக இருவரையும் பரந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று பார்த்த போது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸôர் இரு குழந்தைகளையும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் தந்தை பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

No comments

Thank you for your comments