புனித ஈஸ்டர் குருந்தோலை ஞாயிறு பேரணி
காஞ்சிபுரம் :
புனித ஈஸ்டர் குருந்தோலை ஞாயிறு பேரணியில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் கையில் கருந்துளை ஏத்திக்கொண்டவாறு 200க்கும் மேற்பட்டோர் கையில் குருந்தோலை ஏந்தி கொண்டவாறு ஊர்வலமாக சென்றனர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அருகே உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் அருள்பணி சூசைராஜ் தலைமையில் இன்று நடந்தது.
இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். குருத்தோலை ஞாயிறு தொடங்கி ஒரு வார காலம் புனித வாரமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
இந்த ஒரு வாரத்தில் இயேசுவின் மரணம், அதற்கு முன்னதாக அவர் பட்ட வேதனைகளை நினைவுகூறும் வாரமாக உள்ளது.
இயேசுவின் மரணத்தை நினைவு கூறும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியும் இயேசுவின் உயிர்ப்பை நினைவு கூறும் வகையில் ஏப்ரல் 7ம் தேதி ஈஸ்டர் பண்டிகையையும் கொண்டாட உள்ளனர்.
இந்நிலையில், இந்த தினத்தில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக செல்வது வழக்கம்.
அதன்படி இன்று காஞ்சிபுரத்தில் கிறிஸ்தவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து குருத்தோலைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் முகமை அலுவலகம், திருப்பதிக்குன்றம் வழியாக மறுபடியும் தேவாலயத்தை வந்தடைந்தனர்.
இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கைகளில் பிடித்தபடி கிறிஸ்தவ பாடல்களை பாடிக் கொண்டு சென்றனர்.
No comments
Thank you for your comments