Breaking News

40 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 போலீசார் உட்பட 8பேர் கைது

காஞ்சிபுரத்தில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக இலாபம் ஈட்டி 10முதல் 30சதவீதம் வட்டி தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து சுமார் 40கோடிக்கு மேல் மோசடி செய்த காஞ்சிபுரம் போக்குவரத்து காவலர் ஆரோக்கிய அருண்  பிட்காயின், மணி எக்சேஞ்ச், டிரிம் 11 சூதாட்டம், பெரிய நிறுவனங்களின் பெயர்களை பிரான்சிஸ் வாங்குதல், ஸ்கிராப் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி வசூல்

ஆரோக்கிய அருணின் அண்ணனான காவலர் சகாய பாரத் அவரது மனைவி சௌமியா,தம்பி இருதயராஜ் அவரது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் ஆரோக்கிய அருணிண் தந்தை ஜோசப்,தாய் மரியா செல்வி என ஒரு குடும்பத்தை சேர்ந்த 8பேர் கைது

பாதிக்கப்பட்ட சக காவல்துறையினர்,பொதுமக்கள் கொடுத்த புகாரின் பெயரில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை



தமிழகத்தில் அண்மையில் IFS, AARUDHRA,HIJAU,DAY BY DAY போன்ற பல நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டி பின்னர் பல மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்காமல் இதுவரை சுமார் 10,000கோடி வரை மோசடி செய்துள்ளனர்.அதிலும் காஞ்சிபுரத்தில் அதிக அளவிலானோர் முதலீடு செய்துள்ளனர்.



இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்ததன் பெயரில் குற்றப்பிரிவு போலீசார் அந்நிறுவன  இயக்குனர்கள், ஏஜென்ட்கள் என பலர்‌ மீது வழக்கு பதிந்து தலைமுறைவாக இருந்து வருபவர்களை வலை வீசி தேடி வருவதுடன் தொடர் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவலராக பணி செய்யும், ஏனாத்தூர் புதுநகர் பகுதியை சேர்ந்த இளம் காவலர் ஆரோக்கிய அருண் என்பவர், இதுபோன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்த காவலர்களை குறி வைத்து மூளை சலவை செய்து, "என்னிடம் முதலீடு செய்தால் பிட்காயின், மணி எக்சேஞ்ச், டிரிம் 11 சூதாட்டம், பெரிய நிறுவனங்களின் பெயர்களை பிரான்சிஸ் வாங்குதல், ஸ்கிராப் தொழிலில் முதலீடு, உள்ளிட்ட பலவிதமான ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து லட்சம் ரூபாய்க்கு 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம்" அளிப்பேன் எனக்கூறியுள்ளார்.இவர் போலீஸ் என்பதால் சக போலீஸாரும், பொதுமக்களும் நம்பி பணத்தை முதலீடு செய்திருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் ,சட்டம் ஒழுங்கு காவலர்கள் முதல் மாவட்ட தனிப்படை போலீசார்,காவல் ஆய்வாளர்கள் வரை சுமார் 80 க்கும் மேற்பட்ட காவல் துறையினரிடம் இருந்தும்,பொதுமக்களிடமிருந்தும் குறைந்தபட்சம் 40 கோடி ரூபாய் வரை பணத்தை முதலீடாக பெற்று முதலீட்டாளர்களுக்கு அவ்வப்போது கொஞ்சம் லாபத்தையும் கொடுத்து வந்த ஆரோக்கிய அருண்,கடந்த வருடம் 2022 அக்டோபர் மாதத்தில் இருந்து யாருக்கும் எந்த விதமான பணத்தையும் திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காவல் ஆய்வாளர் ஒருவர்,மாவட்ட தனிப்படை போலீசார் சிலர் நவம்பர் மாதம் மேட்டுதெருவில்  ஜெயஸ்ரீ‌ இருதயராஜ்  நடத்தி வந்த ட்ரங்க் அண்ட் மங்கி நிறுவனத்தில் ஆரோக்கிய அருண் உள்ளிட்ட சகோதரர்களிடம் தாங்கள் முதலீடு பணத்தை கொடுக்கவும் கேட்டு பஞ்சாயத்து செய்ததில் தன்னிடம் பணம் இல்லை ஆரோக்கிய அருண் என கூறியதாகவும் இதற்கு டிரிம் 11 சூதாட்டம் விளையாடி பணத்தை கொடு என அழைத்து சென்றதாகவும் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து வையாவூர் சாலையில் ஆரோக்கிய அருணை இறக்கிவிட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் மாவட்ட தனிப்படை போலீசார் தங்களுக்கு வேண்டிய காவல்துறையினருக்காக பஞ்சாயத்து செய்து கமிஷன் அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் பெற்று கொடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.இதற்கிடையில் இளைஞர்கள் சிலர் தனக்கு சேர வேண்டிய பணம் வராத ஆத்திரத்தில்  ஆரோக்கூய அருணை தாக்கியதாக ஆரோக்கிய அருண் காவல்நிலையத்தினை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கிறார்.இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்த போது பணம் தரவேண்டும் இது தொடர்பாக தான் கேட்டதாக அவர்கள் கூறிய காவல்துறையினர் புறப்பட்டு சென்றிருக்கின்றனர்.இதே போல் ஆரோக்கிய அருணை பலரும் தொடர்பு கொண்டு ஆவேசபடுவதும்,பல்வேறு பிரச்சனைகள் எழுந்த நிலையில் ஆரோக்கிய அருண் தலைமறைவானார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியரணை தொடர்பு கொண்ட முயற்சித்தும் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தும் அவர் இல்லாததால் சக காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும் காவல்துறையில் தொடர் புகார்களை அளித்து வந்தனர்.

அந்த வகையில் பாதிக்க காஞ்சிபுரத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் புகார் அளித்து,இது தொடர்பாக உயர்மட்ட காவல்துறை அதிகாரியிடம் தகவல் இது தொடர்பாக மேலும் புகார் தெரிவிக்க உடனடியாக தலைமறைவாக இருந்துவரும் ஆரோக்கிய அருணை கைது செய்திட மேல் உத்தரவானது வந்திருக்கிறது.

இந்த நிலையில் மாதக்கணக்கில் தலைமுறைவாகி மதுரையில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான போக்குவரத்து காவலரான ஆரோக்கிய அருண்,வங்கி கணக்கு கொடுத்தல் பணம் போடுதல்,செக் கொடுத்தல் போன்ற உதவியாய் இருந்தது,தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் பெற்று கொடுத்தது என மோசடிக்கு உறுதுணையாக இருந்த அவரது மனைவி மகாலட்சுமி,ஆரோக்கிய அருணின் தாய் மரிய செல்வி,தந்தை ஜோசப்,மாமல்லபுரம் டிஎஸ்பி ஆபீஸில் காவலராக பணிபுரியும் அண்ணன் சகாய பாரத்,அவரது மனைவி சௌமியா, ஆயுதப்படை காவலராக இருந்து விட்டு தற்போது பள்ளி கல்வித்துறையில் லேப் டெக்னீசனாக பணிபுரிந்து வரும் இளைய சகோதரர் இருதயராஜ்,அவரது மனைவி ஜெயஸ்ரீ,ஆகிய ஒரு குடும்பத்தை சேர்ந்த 8பேரை கைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில் தன்னிடம் பணமே இல்லை எனவும் டிரிம் 11-ல் தான் பணத்தினை இழந்ததாகவும் பல கோடிகளை சுருட்டிய கேடி போலீஸ் தெரிவிக்க காவல்துறையினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.மேலும் அவர்களது குடும்பத்தினர்களின் வங்கி கணக்குகளில் பல இலட்சங்களில் பண பரிவர்த்தனை என அடுக்கடுக்கான ஆதாரங்கள் கிடைதாலும் அவர்களது வங்கி கணக்கில் சில இலட்சங்களே இருந்துள்ளன.

இதனையெடுத்து இவர்கள் 8பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அனைவரையும் கைது செய்த சிறையில் அடைத்தனர்.

என்ன தான் அவரை பிடித்து சிறையில் அடைந்தாலும் அவர் பல கோடிகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் வெளியில் வந்தவுடன் சொகுசு வாழ்க்கை நிலைக்கு சென்று விடுவார்.ஆனால் அவரால் பாதிக்கப்பட்ட நாங்களுக்கு என்ன வழி என புலம்பி தள்ளூகின்றனர்.என்ன தான் அவர்களின் வேதனை ஒரு புறம் இருந்தாலும் பிறரிடம் ஏமாறக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கும் காவல்துறையினரே பேராசையில் மோசடி பேரோழியிடம் சக போலீசாரிடமே சிக்கி ஏமாற்றமடைந்து புகாரும் கொடுக்க முடியாமல் வெளியிலும் சொல்ல முடியாமல் ஆரோக்கிய அருண் மற்றும் அவரது குடும்பத்தினரின் கைது தங்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் புகார் அளிக்காத போலீசார் பலர் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் இருந்து வருகின்றனர்.

இது போன்று காவல்துறையினர் செய்யும் தவறுகளை முன்கூட்டியே உயரதிகாரிகள் கண்டறிந்து சம்பந்தப்பட்டலர்கள் மீது நடவடைக்கை எடுத்து களையெடுத்தால் காவல்துறைக்கு ஏற்படும் இழுக்கு களையும் என்பதே நிதர்சனமான உண்மை.

இந்த நிலையில் முதலீடு செய்து ஏமாந்த காவல்துறை நண்பர்களுடன் கான்ஃபரன்ஸ்(Conference)காலில் தலைமறைவாகி இருந்த போது போக்குவரத்து காவலர் ஆரோக்கிய அருண் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments