காஞ்சிபுரத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மகனால் சிறைக்கு சென்ற தந்தை
காஞ்சிபுரம், ஏப்.19:
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் வீட்டில் பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்தவரை சிவகாஞ்சி காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் பல்லவர்மேடு கிழக்குப்பகுதியில் வசித்து வருபவர் மணியின் மகன் கண்ணுச்சாமி(43) இவர் தனது வீட்டில் பூந்தொட்டி ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்தாராம். இதை அவரது 10 ஆம் வகுப்பு படிக்கும் மகன் செல்போனில் படம் எடுத்து தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார்.
இத்தகவல் சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் விநாயகத்துக்கு தகவல் கிடைத்ததும் அவரது தலைமையிலான போலீஸôர் அவரது வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.
வீட்டில் 25 லிட்டர் அளவுள்ள குடிநீர் கேனை பூந்தொட்டி போல வடிவமைத்து அதில் கஞ்சா செடி வளர்த்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சா செடியை பறிமுதல் செய்ததுடன் கண்ணுச்சாமியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனால் தந்தை சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments