Breaking News

சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்றாமல் சாலை அமைத்து பாகம் பிரித்த ஒப்பந்ததாரர்.. கொந்தளிக்கும் பொதுமக்கள்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு பகுதியில் அமைந்துள்ள வேதாச்சலம் நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.  இந்த இப்பகுதிக்கு சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் வந்தனர்.


இந்த நிலையில் இப்பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு அப்பணியானது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கியது. 

முதற்கட்டமாக அங்கு குறிப்பிட்ட அளவு ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலையானது அமைக்கும் பணியானது நடைபெற்றது. அப்போது இரண்டு மின்கம்பத்தினை அகற்றி சாலை அமைத்திடாமல் மின்கம்பம் நடுவில் இருந்தபடியே சாலை பணி  நடைபெற்று கடந்த வாரம் முடிந்துள்ளது‌.

இந்த பணிகளே முடிவுற்று இரண்டு வாரங்கள் ஆகியும் தற்போது வரை அந்த மின்கம்பங்களானது அகற்றப்படாமல் சாலையின் நடுவே இருந்து வருகிறது. முறையாக சாலை பணியின் போது மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்கம்பங்களை இடமாற்றம் செய்த பின்னரே சாலை அமைத்திட வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கும் நிலையில் இத்தகைய ஒப்பந்ததாரரின் செயல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே எதேனும் அசம்பாவிதம் ஏற்படு முன் மின்கம்பத்தினை இடம் மாற்றி மின்கம்பத்தினை இடம் மாற்றிடாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அண்மை நாட்களாகவே தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கைபம்பு வைத்து சாலை அமைப்பது, இருசக்கர வாகனங்களை அகற்றிடாமல் சாலை அமைப்பது, இது போன்ற மின்கம்பங்களை அகற்றிடாமல் சாலை அமைப்பது என பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில் எவற்றையும் கருத்தில் கொள்ளாது தற்போது காஞ்சிபுரத்தில் கம்பம் அகற்றிடாமல் சாலை அமைத்திருப்பது ஒப்பந்ததாரரின் அலட்சியத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தின் நிர்வாகத்தின் செயலற்ற திறனையுமே வெளிகாட்டுவதாக உள்ளது.

No comments

Thank you for your comments