போக்குவரத்து வாகன சோதனையில் 2023 மார்ச் மாதத்தில் ரூ.11.29 லட்சம் அபராதம்! - போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர் செல்வம் அதிரடி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இணை போக்குவரத்து ஆணையர் சென்னை தெற்கு சரகம் ஜெய்சங்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் வாலாஜாபாத், உத்திரமேரூர் ,காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையின் போது 1100 வாகனங்களை தணிக்கை செய்து 115 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி உள்ளார்.
இதன் மூலம் ஸ்பார்ட் பைன் முறையில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 100 ரூபாய் (1,77,100) உடனடி வசூலிக்கப்பட்டது, ஒன்பது லட்சத்து 44 ஆயிரத்து 500 ரூபாய் (9,44,500) இணக்கக்கட்டணம் நிர்ணயம் செய்தும் 8064 ரூபாய் வரியாகவும் ஆக மொத்தம் ரூபாய் 11 லட்சம் 29 ஆயிரத்து 644 ரூபாய் மொத்தமாக வாகன தணிக்கையின் போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் 22 வாகனங்கள் தகுதி சான்றிதழ் இல்லாமலும், சாலை வரி செலுத்தாமல், கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வது போன்ற காரணங்களுக்காக வாகனம் சிறைபிடிக்கப்பட்டு அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக 12 லாரிகளுக்கு அதிக பாரம் ஏற்றியதற்கும் , இதில் 21 வாகனங்கள் காப்பு சான்றிதழ் இல்லாமல் இருந்தது , 33 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருந்தது, 15 வாகனங்கள் அதிவேகமாக இயக்க பட்டத்திற்கும், 16 வாகனங்கள் இருக்கை பெல்ட் அனியாததற்கும், 30 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கியதற்கும் போன்ற அனைத்து குற்றங்களுக்கும் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா. பன்னீர்செல்வம் தெரிவித்தார். அருகில் போக்குவரத்து துறை சிறப்பு காவல் ஆய்வாளர் சுரேஷ் உடன் இருந்தார் .

.jpg)
No comments
Thank you for your comments