ஓம் ஸ்ரீ மகா பெரியவா சத் சங்கம் டிரஸ்ட் அலுவலகத்தில் பங்குனி மாத அனுஷ மஹோத்ஸவ்
மேற்கு சைதாப் பேட்டை பார்சன் நகர் வளாகத்தில் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சத் சங்கம் டிரஸ்ட் அலுவலகத்தில் இன்று பங்குனி மாத அனுஷ மஹோத்ஸவ் மிக சிறப்பாக நடந்தேறியது.
காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கி மகா பெரியவா அனுஷ ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு ஆவஹந்தி, ஆயுஷ்ய, நவக்கிரக, நக்ஷ்த்ர ஹோமங்களும் தொடர்ந்து வராக ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஹோமங்களும் அந்தந்த ஹோமத்திற்குரிய திரவியங்களைக் கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது.
திருமணத் தடைகள் நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம் (திரவியம் - வில்வ சமித்து, மஞ்சள் கிழங்கு) புத்திர பாக்கியத்திற்காக ஸ்ரீ சந்தான லக்ஷ்மி ஹோமம் (திரவியம்- வெண்கடுகு), ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம் (திரவியம் - வெண்ணை, தாமரை), அம்பாளைக் குறித்து ஸ்ரீ பஞ்ச பானேஸ்வரி ஹோமம் (திரவியம் - இலுப்பைப்பூ), ஸ்ரீ லக்ஷ்மி வராக மூலமந்த்ர ஹோமம் (திரவியம் - நாயுருவி) போன்றவைகளை மேற்கு மாம்பலம் பாலாஜி சாஸ்திரிகள் குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
நிறைவாக மகா பெரியவா நூதன பஞ்ச லோக உத்ஸவ மூர்த்திக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும், தீபாராதனையும் செய்விக்கப்பட்டது.
வந்திருந்த பக்தர்களுக்கு ஹோமப் பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. திருமணப்பேறு வேண்டிய சில பக்தர்கள் தங்கள் குழந்தைகளின் ஜாதகங்களை பூஜையில் வைத்து தாம்பூலப் பிரசாத்துடன் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
பார்சன் நகருக்கு வெளியே ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை டிரஸ்டின் நிர்வாக இயக்குனர் ராமன் வெங்கடா சிறப்பாக செய்திருந்தார்


No comments
Thank you for your comments