கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி
கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்க 2023- 2024 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஏ கலையரங்கத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. கோவை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் வருடம் ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 2023-2024 ஆம் ஆண்டிற்க்கான தேர்தல் கடந்த மாதம் 30ஆம்தேதி நடைபெற்றது.
தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 3352 - 2082 வாக்குகள் பதிவாகின. மறுநாள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எம்.தண்டபாணி 977வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரோடு போட்டியிட்ட பாலகிருஷ்ணன் 927 வாக்குகளும் ரவீந்திரன் 163வாக்குகளும் பெற்று தோல்வியுற்றனர். வெற்றிபெற்ற கே.எம்.தண்டபாணி 7வது முறையாக வெற்றிபெறுவது குறிப்பிடத்தக்கது.
துணைத் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட இரண்டு பேரில் ஜோகராஜ் 1230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட்ட நான்கு பேரில் திருநாவுக்கரசு 906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பொருளாளர் பொறுப்பிற்கு போட்டியிட்ட நான்கு பேரில் முத்துகிருஷ்ணன் 835 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்றும் இணைச்செயலாளர் ஆர் லலிதா செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயபிரகாஷ், ஜி.சந்தோஷ், கே.சதீஷ், எஸ்.ஷேக்முகமது, டி.சிவசக்தி, எஸ்.வளர்மதி ஆகியோர் பொறுப்பேற்று கெண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னால் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments