08.04.2023 அன்று பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 08.04.2023 அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் கோளிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ராவத்தநல்லூர், வாலாஜாபாத் வட்டத்தில் பூசிவாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு /மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments