கோவை மற்றும் ஈரோட்டில் உணவு திருவிழா, இயற்கை வேளாண் திருவிழா
கோவை மாவட்டம் தி ரைஸ் - எழுமின் அமைப்பு நண்பன் அறக்கட்டளை அன்னை பூமிக்கான அன்னையர்கள் அமைப்பும் இணைந்து பசுமை சங்கமம் என்ற தினை உணவு இயற்கை வேளாண் மற்றும் பொது பசுமை இயக்கத்தினை உலக அளவில் நடத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உலக அளவிலும் தினை உணவு திருவிழா, இயற்கை வேளாண் திருவிழா வரும் ஏப்ரல் 14, 16 ஆம் தேதியில் கோவையிலும் 15 ஆம் தேதி ஈரோட்டிலும் நடைபெற உள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தி ரைஸ் - எழுமின் அமைப்பின் நிறுவனர் ஜெகத்கஸ்பர் கூறுகையில் நிர்மலா கல்லூரியில் 200க்கும் மேலான தினை உணவு காட்சிப்படுத்தல், தினை உணவகங்கள், 300க்கும் மேலான நாட்டு வகை விதைகள் காட்சிப்படுத்தல், மற்றும் விற்பனை அரங்குகள், மூலிகைகள் சார்ந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார்.
மேலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தினுடைய பெண் வேளாண் வெற்றித் தொழில் முனைவோரை விருது வழங்கிச் சிறப்பித்தல் புது முயற்சியாக 500 வகையான சிறுதானிய இட்லி கண்காட்சியும் நடைபெற உள்ளதாகவும், ஏப்ரல் 16 ஆம் தேதி வ.உ.சி பூங்கா அருகில் தினை உணவு மாரத்தான் மிகப்பெரிய அளவில் நடக்க உள்ளதாகவும் இந்த மாரத்தானில் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கலந்து கொண்டு சிறுதானிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். உடன்
நண்பன் அறக்கட்டளையின் பிரதிநிதி சக்தி மற்றும் ப்ரீத்தி, பாரதி, தடகள தொழில்நுட்ப தலைமை பயிற்சியாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

No comments
Thank you for your comments