Breaking News

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பஞ்சமூர்த்திகள் உற்சவம்

பஞ்சபூத ஸ்தலங்களில்   மண் ஸ்தலமா விளங்கக்கூடிய புகழ் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இந்தாண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்ச்சவம் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது.


இவ்விழாவின் பதிமூன்றாம் நாள் விழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார் குழலிக்கும் சிறப்பு அபிஷேகமானது நடைபெற்றுது.  அதனை தொடர்ந்து இரவு பஞ்ச மூர்த்திகள் உற்ச்சவமானது வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இதில் ஏகாம்பரநாதரும், ஏலவார்குழலி அம்மையாரும் வெள்ளி இடப வாகனத்திலும், வள்ளி தெய்வயானையுடன் முருகர் மயில் வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் தங்க இடம் வாகனத்திலும் எழுந்தருளினர்.

இதில் பஞ்சமூர்த்திகள் ரம்மியமாக ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நான்கு ராஜவீதிகள் வலம் வந்த பஞ்ச மூர்த்திகளை வழிநெடுகிலும் ஏர்ளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டு சென்றனர்.



No comments

Thank you for your comments