Breaking News

காஞ்சிபுரம் அரசு காப்பத்திலிருந்து தப்பியோடிய 4 சிறுமிகள் மீட்பு - இருவர் பணி இடை நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு சாலபோகம் பகுதியில்  அன்னை சத்யா அரசு குழந்தைகள்  காப்பகம் செயல்பட்டு வருகிறது.


இங்கு தாய் தந்தையை இழந்த  ஆதரவற்ற குழந்தைகள், கல்வி நிலையை தொடர இயலாத குழந்தைகள் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் சிறு வயதில் திருமணம் வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சிறுமிகள், குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் அரசு காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தில் குழந்தைகள், சிறுமிகள் என 29 பேர் உள்ளனர். 


இந்த நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 சிறுமிகள் காதல்‌ மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற பிரச்சனையால் மீட்டு குழந்தைகள் நல குழுமத்தினால் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் சிறுமிகள் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு தூங்க சென்று விட்டனர். இந்நிலையில் பாதுகாவலர் இரவு பணியில்  இருந்த  பாதுகாவலரனின் அறையை தாழிட்டு விட்டு 6 சிறுமிகள் தப்பி ஓடினர்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து ஓடிய ஆறு சிறுமிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

அதே போல் சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல குழுமத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியும், கரசங்கால் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் தங்கள் வீடுகளுக்கு சென்ற நிலையில் நேற்று மாலை அவர்களின் பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சிறுமிகளை ஒப்படைப்படனர்.

இந்த நிலையில் மேலும் நான்கு சிறுமிகளை தேடும் பணிக்காக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு காஞ்சிபுரம் குண்டுகுளம் பகுதியை சேர்ந்த சிறுமி, அதே போல் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சிறுமி என மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதனால் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 6 சிறுமிகளில் தற்போது வரை 4 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர் மேலும் இரண்டு சிறுமிகளை தேடும் பணியானது முடுக்கிவிடப்பட்டது. இதற்கென 4 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடும் பணியானது தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

அதே போல் ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பாக அரசு குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் தப்பி ஓடும் வகையில் அஜாக்கிரதையாக இருந்த காப்பக காப்பாளர்(வார்டன்) டீனா தேவி, பாதுகாவலர்(செக்யூரிட்டி) சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் பணி இடை நீக்கம் செய்து சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.

No comments

Thank you for your comments