Breaking News

திருமணத்திற்கு சில நாள்... சிதைந்தது பல நாள் காதல் கனவு... கதறி அழுத காதலி

காஞ்சிபுரம் :

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சிறுவஞ்சிபட்டு பகுதியை சேர்ந்தவர்கள் முரளி-புவனேஷ்வரி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 



கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகளுக்கு திருமணமாகியது.  இந்த நிலையில் முரளி கடந்த ஓராண்டுக்கு முன்னர் உயிரிழந்து விட புவனேஷ்வரியுடன் அவரது மகன் மோகன்ராஜ் வசித்து வருகிறார்.

சென்னை திருவேற்காடு அருகே புகைபட கலைஞராக (போட்டோகிராபர்) பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில் தான் பணிபுரியும் பகுதியின் அருகாமையில் வசிக்கும் 23 வயதுடைய பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு அவை காதலாக மாறி இருவருக்கும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.


பின்னர் இவர்கள் இருவரது பழக்க வழக்கம் குறித்து இருவரது வீட்டிற்கு தெரியவர அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் பேசி பெற்றோர்களை ஒப்புக்கொள்ள வைத்தனர். 

இதையடுத்து, இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம்  நடைபெற்றுது.  இம்மாதம் 26-ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இவர்களுக்கு இன்னும் சில நாட்களில  திருமணம் நடக்கவிருந்தது. இதற்கான ஏற்பாடு செய்திட மோகன்ராஜ் நேற்று தனது வருங்கால மனைவின் வீட்டிற்கு சென்று அவரது திருமணத்திற்காக அளவு ஜாக்கெட்டினை வாங்கி கொண்டு வீட்டிற்கு ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் தாமல் அருகே அடையாளம் தெரியாத முதயவர் ஒருவர் சாலை விபத்தில் இறந்த நிலையில்  இருந்துள்ளார். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பாலுசெட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது‌ எதிர்சாலையில் காஞ்சிபுரம் வழியாக ராணிப்பேட்டை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுநர், கூட்டமாக இருப்பதை பார்ந்து சடர்னாக பிரேக் அடித்துள்ளார். 

இதனால் லாரியின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மோகன்ராஜ் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானார். இவ்விபத்தில் மோகன்ராஜ் துடிதுடித்து கொண்டிருந்துள்ளார்.

இவ்விபத்து கண்ட எதிர்சாலையிலிருந்த பாலுசெட்டி போலீசார் ஓடி வந்து பார்த்த போது இரத்த வெள்ளத்தில் மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து லாரி ஓட்டுநர் தப்பியோடியதும் தெரியவந்தது. இதனையடுத்து ஆதரவற்ற முதியவர் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரது சட்லங்களையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மோகன்ராஜ் யார் எவர் என்பது குறித்து ஆராய்ந்த போது அவரது வாகனத்தின் திருமண பத்திரிக்கைகளும், ஜாக்கெட் துணியும் இருந்துள்ளது. இதனையடுத்து அவரது தொலைபேசியை எடுத்து அவரை அழைத்திருந்த நிலையில் அதில் அவர் திருமணம் செய்யவிருந்த மணப்பெண் மற்றும் அவரது தங்கை இருவருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையறிந்து பதறி அடித்து கொண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமைனைக்கு வந்த மணப்பெண் மோகன்ராஜ் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு கதறி அழுதது காண்போரின் கண்களையே கலங்க அடித்தது.அதே போல அவரது தங்கையின் கதறலும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

திருமணத்திற்கு இன்னும் சில நாட்களாக உள்ள நிலையில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி காதலித்தவனை கரம் பிடிக்க கனவுகளோடு இருந்த மணப்பெண்ணின் கனவுகள் சிதறி, கண்ணீர் சிந்தி அழும் நிலைக்கும் தள்ளப்பட்ட சம்பவம் பெரும் சோதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments