தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம்.. ஒப்பந்தாரார்களுக்கு கிடுக்குபிடி
ஆவடி :
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்காக குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் தலைவர் திரு வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டார் இக்கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஊதியங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்று கேட்டறிய இக்கூட்டம் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ் ஐஏஎஸ் மற்றும் துணை ஆணையர் விஜயகுமாரி காவல் துணை ஆணையர் பாஸ்கரன் சுகாதார அலுவலர் ஆல்பர்ட்ராஜ் மொய்தீன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் தலைவர் வெங்கடேசன் அவர்கள் தூய்மை பணியாளர்களை பார்த்து உங்களுக்கு ஊதியம் ஒழுங்காக வழங்கப்படுகிறதா.. மருத்துவ முகாம் நடத்தப்படுகிறதா.. உங்களுக்கு மாதந்தோறும் சோப்பு வழங்கப்படுகிறதா.. யூனிபார்ம் மற்றும் கை குளோஸ் சூஸ் மாஸ்க் இ எஸ் ஐ பி எப் அவைகள் அனைத்தும் முறையாக வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.
இந்தக் கேள்விக்கு தூய்மை பணியாளர்கள் சரிவர பதிலளிக்கவில்லை உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ஊதியம் என்று தெரியுமா என்று கேட்டார் சரியான பதில் இல்லை ஒரு மாதத்திற்க்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டார் அதற்க்கு 9600 என்று பதில் அளித்தனர் உங்களுக்கு போதுமானதா என்று கேட்டறிந்தார் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
இதற்கு பிஜேபியை சார்ந்த அஸ்வின் என்பவர் நீங்க வருவதை முன்கூட்டியே அறிந்த ஒப்பந்ததாரர்கள் இவர்களுக்கு ஆறு மணி முதல் 8 மணி வரை கூட்டம் கூட்டி நீங்கள் கேட்கும் கேள்விக்கு எவ்வாறு தலையை ஆட்ட வேண்டும் வாய் பேசாமல் இருக்க வேண்டும் என்ற உள்ளிட்டவைகளை கற்றுக் கொடுத்து தான் இங்கு அழைத்து வந்தனர்
மொத்தமாக இந்த ஒப்பந்ததாரிடம் 650 க்கு மேற்பட்டோர் பணிபுரிகிறார்கள். ஆனால் இங்கு வந்திருப்பது வெறும் 25 நபர்கள் மட்டுமே இந்த கூட்டத்திற்கு ஒப்பந்ததாரர் வரவில்லை.. இவருக்கு பதிலாக சூப்ரவைசர் வந்திருந்தார்.
இவரும் சரிவர பதில் அளிக்காததால் தேசிய தூய்மை பணியாளர் தலைவர் வெங்கடேசன் அவர்கள் சரியாக இவர்களுக்கு என்னென்ன வழங்கப்படுகிறது மற்றும் நீங்கள் மருத்துவ முகாம் நடத்தி இருந்தால் அதற்கு உண்டான ஆவணங்கள் பிஎஃப் இஎஸ்ஐ பிடித்திருந்தால் அதற்கு உண்டான ஆவணங்கள் அனைத்தையும் எனக்கு வழங்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார்
இதேபோல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் சரியாக செல்லாததால் இவர்களை அந்தந்த நிறுவனமே நேரடியாக எடுத்து நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதை போல் கர்நாடகாவிலும் நடந்திருப்பதாகவும் இவர் தெரிவித்திருந்தார்
வாரியத்திற்கு பதிலாக ஆனணயமாக மாற்ற வேண்டும் என்பதை தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார் நீங்கள் நேரடியாக என்னிடத்தில் புகார் தெரிவித்தால் பணியை விட்டு நீக்கி விடுவார்கள் என்ற பயத்தினால் தான் இருக்கிறீர்கள் என்றும் நீங்கள் மறைமுகமாக எனது தொலைபேசி எண்ணை இப்போது தருகிறேன் அதன் வாயிலாக நீங்கள் புகார் அளித்தாலும் நடவடிக்கை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார். மேலும், புகார் எண் 9443035028 என்ற தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப்பிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்



No comments
Thank you for your comments