சாதனையாளர் விருது பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள்
ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சித் தலைவர்களுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழா புதுதில்லியில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவரியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, அங்கம்பாக்கம், ஆரியபெரும்பாக்கம், காலூர், தாமல் போன்ற ஊராட்சித் தலைவர்களுக்கு சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் வி கே சிங் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் ஆகிய அமைச்சர்களால் வழங்கப்பட்டது.
இவ்விருதினை பெற்ற தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் அவர்கள் குறிப்பிட்டதாவது
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நான் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறேன். அதற்கு உறுதுணையாக துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றப் பணியாளர்கள், ஒன்றிய மாவட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், குறிப்பாக தேவரியம்பாக்கம் கிராம பொதுமக்கள் என அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கி வருகிறார்கள்.
இந்தப் பெருமை மேற்குறிப்பிட்ட அனைவரின் நல் ஒத்துழைப்பிற்கு கிடைத்த சான்றாகக் கருதி அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


No comments
Thank you for your comments