Breaking News

பிரம்மோற்ச்சவத்தின் 9-ஆம் நாளையொட்டி ஏகாம்பரநாதர், ஏலவார் குழலியோடு வெள்ளி மாவடி சேவையில் எழுந்தருளி அருள்பாலிப்பு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்ச்சவத்தின் 9-ஆம் நாளையொட்டி ஏகாம்பரநாதர், ஏலவார் குழலியோடு வெள்ளி மாவடி சேவையில் எழுந்தருளி அருள்பாலிப்பு

வெள்ளி மாமரத்தில் மாங்கனிகள் தொங்குவது போன்று பழங்கால நடைமுறைகளை நினைவுகூறும் வகையில் அலங்கரிப்பு

நான்கு ராஜ வீதிகள் வலம் வந்த ஏகாம்பரநாதரையும், ஏலவார் குழலியையும் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய முழக்கமிட்டபடி சாமி தரிசனம்




பஞ்சபூத ஸ்தலங்களில் விளங்கக்கூடிய புகழ் பெற்ற சிவஸ்தானங்கள் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் திருவிழாவானது நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டு பங்குனி உத்திர திருக்கல்யாணம் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றமானது வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின் ஒன்பதாம் நாள் விழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும்,ஏலவார்குழலிக்கும் சிறப்பு அபிஷேகமானது நடைபெற்று அதனை தொடர்ந்து இரவு ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்மையாரோடு வெள்ளி மாவடி சேவையில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்த மாவடி சேவையில் வெள்ளியினால் செய்யப்பட்டிருந்தாலும் கூட பழமையான நடைமுறையான மாமரம் கொண்டு சாமி எழுந்தருளும் வகையில் இதில் மாமர கிளைக்கள் கொண்டு அதில் மாங்கனிகள் தொங்கிய வாறும் இருந்தது பழமையான நினைவுகளை பொதுமக்கள் நினைவு கூறும் வகையில் இருந்தது.

இவ்விழாவையொட்டி வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments

Thank you for your comments