Breaking News

காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில் மே.4ம் தேதி மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி வர்ணம் பூசப்படுவதற்காக மூடப்பட்டிருக்கும் கோயில் ராஜகோபுரம்

கேது தோஷம் போக்கும் சிறப்புக்குரியதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கது காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலாகும். 

இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறுவதால் ஆலயத்தின் திருப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் மே மாதம் முதல் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன் தொடங்குகிறது.

இதன் தொடர்ச்சியாக வரும் மே மாதம் 4 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜகோபுரத்திற்கு புனித நீர்க்குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து மூலவர் சித்ரகுப்த சுவாமிக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது. மாலையில் கர்ணகி அம்பிகைக்கும், சித்ரகுப்த சுவாமிக்கும் திருக்கல்யாணமும் இரவு வீதி உலாவும் நடைபெறுகிறது.

மறுநாள் 5 ஆம் தேதி அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சித்ரா பௌர்ணமி சிறப்பு தரிசனமும் நடைபெறுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கே.எம்.ரகுராமன், கோயில் செயல் அலுவலர் மா.அமுதா ஆகியோர் தலைமையில் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


No comments

Thank you for your comments