Breaking News

காஞ்சிபுரத்தில் வேன் ஓட்டுநர் கற்களால் அடித்து கொடூர படுகொலை-2பேர் கைது

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பாவாபேட்டை தெருவை சேர்ந்தவர் அயுப்கான்(50).இவர் தனது மனைவி  ராபியாபி ஒரு மகள்,மகனுடன் வாழ்ந்து வருகிறார்.ஓட்டுநரான இவர் ரங்கசாமிகுளம் அருகேயுள்ள வேன் தொழிற்சங்கத்தில் கூலி  அடிப்படையில் ஓட்டி வருகிறார்.



இந்த நிலையில் இன்று ரம்ஜான் என்பதால் நேற்று இரவு அவரது வேன் உரிமையாளர்(ஓனர்)அயுப்கானிடம் 10,000ரூபாய் கொடுத்ததாகவும்,மேலும் நேற்று வெளியூர் சவாரி சென்று வந்த கூலி என 3000 ரூபாய்க்கு மேல் வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

வழக்கம் போல் சவாரி முடித்துவிட்டு நள்ளிரவு மது அருந்துவதற்காக தனது தொழிற்சங்கத்தின் அருகேயுள்ள அம்மா உணவகத்தின் வாயில் தனது வாகனத்தினை நிறுத்திவிட்டு அதன் அருகே அமர்ந்து மது அருந்திவந்த நிலையில் இருசக்கர வாகன்ததில் வந்த மர்ம நபர்கள் அயுப்கானை செங்கற்களால் தாக்கியுள்ளனர்.மேலும் அங்கிருந்து அயுப்கான் தப்பி சென்று ரங்கசாமிகுளம் வளைவு சந்திப்பின் அருகே ஓடிய நிலையிலும் அவரை விடாத மர்ம நபர்கள் மீண்டும் அவரை கற்களாலும்,கை,கால்களால் உதைத்தும் கொடூர கொலை செய்து அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றிருக்கின்றனர்.



இது குறித்து அறிந்த விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக‌ காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனையெடுத்து அப்பகுதியில் போலீசார் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அயுப்கானை கொலை செய்த குற்றவாளிகள் கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டது. 

அதில் ஒருவர் சேக்குபேட்டை நடுத்தெருவை பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் (வயது 25) என்பதும் மற்றொருவர்  பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 25) என்பதும் கண்காணிப்பு கேமரா மூலம் தெரிய வந்தது.

அதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை கொண்டு வருகின்றார்கள்.  

முதல் கட்ட விசாரணையில், அயுப்கான் மது அருந்தும் இடத்தில் இந்த இரண்டு இளைஞர்களும் மது அருந்தியதாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து அயுப்கானை கல்லால் தாக்கி படுகொலை செய்து விட்டு பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியதாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் தலைமறைவாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments