கோவை காரமடை நகராட்சியில் 46 வீட்டுமனை பட்டா வழங்கினார் எம்பி ஆ.ராசா
கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, வார்டு எண் 15 எத்தப்பன் நகர் பகுதியில் பொது மக்களுக்கு 46 வீட்டுமனை பட்டா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அருண்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, காரமடை திமுக நகர செயலாளர் இரா வெங்கடேஷ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே. ஜி குரு பிரசாந்த், காரமடை நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், நகர்மன்ற உறுப்பினர் நித்யா சோமசுந்தரம், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி, நகராட்சி ஆணையாளர் பால்ராஜ், நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், நகர்மன்ற உறுப்பினர்களும் அலுவலக பணியாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments