Breaking News

20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்த பெண் காவலருக்கு தமிழக அரசின் நற்பணி சான்று வழங்கி பாராட்டு

கோவை மாவட்டம் 20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்து தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற பெண் காவலருக்கு நற்சான்றிதழ், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.


26.01.2023 குடியரசு தின அணிவகுப்பின் போது, 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் கோவை சரகம் பணியிடை பயிற்சி மையத்தில் பணிபுரியும் பெண்காவலர்  திருமதி.பூங்கொடி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேற்படி  பெண் காவலருக்கு தமிழக அரசின் நற்பணி சான்றிதழை இன்று (17.04.2023) கோவை சரக காவல் அலுவலகத்தில் வைத்து கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்  விஜயகுமார் வழங்கி, அவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவி்த்தார்.

No comments

Thank you for your comments