சாலையோர வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் செயற்குழுக் கூட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நல சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் கே.என்.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க செயலாளர் கே.சரஸ்வதி. வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வர்த்தக சங்க பேரவை மாவட்ட செயலாளர் எ .வேலுமணி. மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏசி குமார் மாவட்டத் துணைத் தலைவர் தசரதன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் வரும் ஐந்தாம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள வணிகர் மே தின மாநாட்டிற்கு அனைவரும் செல்லவும். அரசாங்கத்தால் வழங்ககூடிய நகராட்சி மூலம் ஐடி கார்டு பெறவும், சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி நியமனம் செய்ததும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் வேலுமணி உறுப்பினர்களுக்கு மே ஐந்தாம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ள வணிகர்கள் மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கினார்.
இதில் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கப் பொருளாளர் வி.எஸ்.குமார் நன்றிகளை தெரிவித்தார்.
தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.





No comments
Thank you for your comments