காஞ்சிபுரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் இடக்கண் பெற்ற நிகழ்ச்சி விமரிசையாகக் நடைபெற்றது..
காஞ்சிபுரம், மார்ச்.2-
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இடக்கண் பெற்ற சரித்திர நிகழ்ச்சி வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
படவிளக்கம் : பல்லக்கில் வீதியுலா வந்த சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள்(உள்படம்)சுந்தரமூர்த்தி நாயனார்
சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள்.இவர் இறைவன் சொல்லை மீறி நடந்ததால் இடது கண் பார்வையை இழந்தார்.பின்னர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வணங்கி அவர் மீது ஆலந்தான் உகந்து அமுது செய்தானை என்ற பதிகம் பாடி இடது கண் பார்வையை பெற்றார் என புராணம் கூறுகிறது.
இச்சரித்திர நிகழ்வு ஆண்டு தோறும் மாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இத்திருநாளையொட்டி காலையில் மூலவர் ஏகாம்பரநாதர்,உற்சவர்களான ஏகாம்பரநாதர், ஏலவார குழலி அம்பிகை,விநாயகர்,சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக ஏகாம்பரநாதர் சந்நிதி முன்பாக சுந்தரமூர்த்தி நாயனார் கண்ணொளி வேண்டி வணங்க இடது கண் பார்வையை கொடுத்தருளும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது சிவவாத்தியங்கள் பலவும் இசைக்கப்பட்டன.பின்னர் பல்லக்கில் உற்சவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆலயத்திலிருந்து நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்து மீண்டும் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். இந்நிகழ்வில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments
Thank you for your comments