கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில செயற்குழுக் கூட்டம்
காஞ்சிபுரம், மார்ச் 5 -
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.அழகிரிசாமி தலைமைத் தாங்கினார். மாநில துணைத் தலைவர் செந்தில் நாதன், மாநில தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார், மாநில செயலாளர் வடக்கு மண்டலம் பக்கிரிசாமி, மாவட்ட தலைவர் காஞ்சிபுரம் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவு செய்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பணி நியமன அலுவலர் தகுதிகான பருவம் விளம்புகை செய்ய வேண்டும்.
பெரிய வேளாண்மை பணிகளை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இடர்படி வழங்க வேண்டும்.
நிலையான பயணப்படியை ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
டி.எஸ்.எல்.ஆர்., கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர்களிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் காஞ்சிபுரம் இராமமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் மோகனரங்கன், மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 37 மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments